Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வாகனங்களை மோதிவிட்டு காரை நிறுத்தாமல் சென்ற ஆடவர் மீது போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு

வாகனங்களை மோதிவிட்டு காரை நிறுத்தாமல் சென்ற இரு சம்பவங்கள் தொடர்பாக சந்தேக நபர் ஒருவரைத் தேடி கைதுசெய்துள்ளனர் காவல்துறை.

வாசிப்புநேரம் -
வாகனங்களை மோதிவிட்டு காரை நிறுத்தாமல் சென்ற ஆடவர் மீது போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு

(படம்: Singapore Police Force)


வாகனங்களை மோதிவிட்டு காரை நிறுத்தாமல் சென்ற இரு சம்பவங்கள் தொடர்பாக சந்தேக நபர் ஒருவரைத் தேடி கைதுசெய்துள்ளனர் காவல்துறை.

நேற்று (நவம்பர் 9) அந்த 37 வயது ஆடவர் மீது போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

புதன்கிழமை காலையில் இரு சம்பவங்கள் குறித்து தகவல் பெற்றதாக சிங்கப்பூர்க் காவல்துறையும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் தெரிவித்துள்ளன.

கேலாங் பாரு ரோட்டில் பெண்டமியர் ரோட்டை நோக்கி செல்லும் வழியிலிருந்த டாக்ஸியைச் சம்பத்தப்பட்ட கார் முதலில் மோதியிருக்கிறது.

பின்னர், புளோக் 22 செயிண்ட் ஜார்ஸ் ரோட் (Block 22 St George's Road) அருகே நிறுத்தப்பட்டிருந்த மற்றுமொரு காரை மோதியது அது.

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணை வழி சிங் ஜூ வாக்கில் (Sing Joo Walk)வசித்து வந்த ஆடவர் கைதுசெய்யப்பட்டார்.

அவரிடம் போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆடவரைக் கைதுசெய்யும்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டது.

சாங்கி மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பின்னர் அவர் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்