Images
  • HIV leak (1)
    (படம்: Mikhy Brochez)

HIV தகவல் கசிவுச் சம்பவம்: மிக்கி புரோஷேயின் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை - சிங்கப்பூர் அதிகாரிகள்

HIV பதிவேட்டுத் தகவல்கள் கசிந்த சம்பவம் குறித்து அமெரிக்கரான மிக்கி புரோஷே தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை, சிங்கப்பூர் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

Facebook பதிவில் அவர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் பொய் என்றும் ஆதாரமற்றவை என்றும் அதிகாரிகள் கூறினர்.

தகவல் கசிவுச் சம்பவத்துக்குத் தாம் காரணமாகச் சுட்டப்படுவதை, புரோஷே தமது பதிவில் மறுத்துள்ளார்.

மாறாக அவர், வேறு சில புகார்களைத் தெரிவித்துள்ளார்.

தாம் சிங்கப்பூர் சிறையிலிருந்துபோது துன்புறுத்தப்பட்டதாகவும், அங்குதான் தனக்கு HIV கிருமி தொற்றியதாகவும் புரோஷே தெரிவித்துள்ளார்.

அங்கு தனக்குத் தகுந்த மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

HIV பதிவேட்டுத் தகவல் கசிந்த சம்பவத்திற்கு மற்றொரு நபர் காரணமென்றும் புரோஷோ கூறியுள்ளார்.

தமது காதலர் டாக்டர் லெர் டெக் சியாங்கின் (Ler Teck Siang) வேலையிடக் கணினியை ஓர் ஆடவர் திருடிச் சென்றதாக அவர் சொன்னார்.

ஆனால், அவை அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் என சிங்கப்பூர்க் காவல் படையும், சிங்கப்பூர் சிறைச் சேவையும் இணைந்து வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையும், புரோஷே, தொடர்ந்து பொய்யான அல்லது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருவதாகத் தெரிவித்தது.

தானும் காவல்துறையும் அந்த விவகாரம் குறித்து தீவிரப் புலனாய்வு நடத்தியதை அமைச்சு சுட்டியது.

போதைப் பொருள் தொடர்பான பல்வேறு குற்றங்களுக்காகவும், மோசடிக்காகவும் புரோஷே நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் என்பதை அறிக்கை சுட்டியது.




Top