Images
  • hk sg
    (படம்: AFP)

ஹாங்காங்- சிங்கப்பூர் இடையில் தொடங்கப்படவிருக்கும் கட்டுப்படுத்தப்பட்ட பயணமுறை குறித்து விரைவில் மேல்விவரம் வெளியிடப்படும்: அதிகாரிகள்

ஹாங்காங்கில் நிலவரம் மோசமடைவதால் அதற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் தொடங்கப்படவிருக்கும் கட்டுப்படுத்தப்பட்ட பயணமுறை குறித்துக் கூடிய விரைவில் மேல்விவரம் வெளியிடப்படும் என்று சிங்கப்பூர் சிவில் விமானப்போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

பயண முறை தொடங்கப்படுவதற்கு இன்னும் இரண்டு நாள்கள் மட்டும் உள்ள நிலையில் அவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

பயணமுறை குறித்துச் சிலர் கேள்வி எழுப்பியதாக ஆணையம் கூறியது.

ஆணையம் நிலவரத்தைப் பற்றித் தகவல் பெறுவதற்குச் சுகாதார அமைச்சுடன் அணுக்கமாகப் பணியாற்றி வருவதாக அது சொன்னது.

சிங்கப்பூர் அரசாங்கமும் ஹாங்காங் அரசாங்கமும் தொடர்பில் இருப்பதாகக் கூறப்பட்டது.

சிங்கப்பூர்- ஹாங்காங் இடையிலான விமானச் சேவை ஏற்பாட்டின் படி, ஒருவார அடிப்படையில் நாளொன்றுக்குப் பதிவாகும் சராசரி தொடர்பில்லாத கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 7-க்கும் அதிகமாக இருந்தால், பயணமுறை ரத்துசெய்யப்படலாம்.

ஹாங்காங்கில் இன்று (நவம்பர் 20) 26 புதிய கொரோனா கிருமிப்பரவல் சம்பவங்கள் பதிவாயின.

அவற்றுள் 21 உள்ளூர்ச் சம்பவங்கள்.

திங்கள்கிழமையிலிருந்து இரண்டு வாரங்களுக்கு ஹாங்காங்கில் தொடக்கநிலை 1 முதல் 3 வரை பயிலும் பிள்ளைகளுக்குப் பள்ளிகள் மூடப்படுகின்றன.  

Top