Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

15 பேர் நோய்வாய்ப்பட்டதால் ஹாலந்து குளோஸிலுள்ள கடை ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

6 ஹாலந்து குளோஸிலுள்ள Kin Hoi என்ற கடையின் உணவை உட்கொண்டவர்களில் 15 பேர் gastroenteritis எனும் வயிற்றுக் கோளாற்றால் பாதிக்கப்பட்டனர். அதனையடுத்து அக்கடை நேற்றிலிருந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
15 பேர் நோய்வாய்ப்பட்டதால் ஹாலந்து குளோஸிலுள்ள கடை ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

படம்: Facebook/Kin Hoi

6 ஹாலந்து குளோஸிலுள்ள Kin Hoi என்ற கடையின் உணவை உட்கொண்டவர்களில் 15 பேர் gastroenteritis எனும் வயிற்றுக் கோளாற்றால் பாதிக்கப்பட்டனர். அதனையடுத்து அக்கடை நேற்றிலிருந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சென்ற மாதம் 28ஆம் தேதியிலிருந்து இம்மாதம் 15 தேதி வரை கடையின் உணவை உண்ட அந்த 15 பேருக்கு வயிற்றுக்கோளாறு ஏற்பட்டது.

அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

சுகாதார அமைச்சும் சிங்கப்பூர் உணவு அமைப்பும் இணைந்து விசாரணை நடத்துகின்றன.

தாய்லந்துக் கடலுணவு வகைகளைத் தயாரிக்கும் அந்தக் கடை, வீட்டு விநியோகமும் செய்தது.

Kin Hoi கடையில் பணிபுரிவோர் மீண்டும் உணவுப் பாதுகாப்புப் பயிற்சிக்குச் சென்று தேர்ச்சிபெற்ற பின்பே பணிகளைத் தொடர்வதற்கு அனுமதிக்கப்படுவர்.

- CNA  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்