Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வீட்டில் கற்கும் மாணவர்களுக்குப் புதிய வழிகளில் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள்

சிங்கப்பூரில் நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் நடப்பில் உள்ள இவ்வேளையில், பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே பாடங்களைக் கற்றுவருகின்றனர். 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் நடப்பில் உள்ள இவ்வேளையில், பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே பாடங்களைக் கற்றுவருகின்றனர்.

வீட்டிலிருந்து கற்கும் முறை இம்மாதம் 8ஆம் தேதி நடப்பிற்கு வந்தது.

வீட்டிலிருந்து கற்கும் முறையில் இரண்டு வழியாகக் கற்றல் நடைபெறுகிறது. ஒன்று இணையம் வழியாகப் பாடங்களைப் பயிலுதல்.

அதில் மாணவர்கள் Singapore Student Learning Space (SLS) என்ற இணையவாசல் மூலமாகப் பாடங்களைக் கற்கின்றனர்.

மற்றொன்று இணையத்தைப் பயன்படுத்தாமல் கற்கும் முறை.

புத்தகங்களை வாசித்தல், பாடநூலில் பயிற்சி செய்தல், பயிற்சித்தாள்களைப் பூர்த்தி செய்தல் ஆகியவை அதில் அடங்கும்.

ஆசிரியர்கள் எவ்வாறு புத்தாக்கமிக்க வழிகளைக் கையாண்டு மாணவர்களின் கற்றல் அனுபவத்தைச் சுவைமிக்கதாக்குகின்றனர் ?

செய்தியில் பயன்படுத்தப்படும் புதுச் சொற்களைக் குறித்துக் கொண்டு பாடத்தின்போது மாணவர்கள் அவற்றைப் பகிர்ந்துகொள்வர்

- திருமதி ஜெயசுதா, தமிழ் ஆசிரியை, செங்காங் தொடக்கப்பள்ளி

சில ஆசிரியர்கள் வீட்டிலிருந்து கற்கும் முறை நடப்பிற்கு வரும் முன்னரே, தொழில்நுட்பத்தின் துணையோடு பாடங்களை சுவாரஸ்யமான முறையில் நடத்தத் தொடங்கிவிட்டனர்.

தொடக்கத்தில் சில மாணவர்கள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவிலோ கட்டாய விடுப்பிலோ இருந்தனர். அப்போது மின்னிலக்க வெண்பலகையின் (Digital Whiteboard) மூலம் மாணவர்களுக்குக் கணக்குப் பாடங்களை நடத்தினேன்.

அசைவோவியங்களின்மூலம் (Animations) கணக்குப் பாடங்கள் சித்திரிக்கப்பட்டிருந்ததால் மாணவர்களை அவை வெகுவாக ஈர்த்தன.

வீட்டிலிருந்து கற்கும் முறை முழுமையாக நடப்பிற்கு வந்தவுடன் மாணவர்களுக்குப் பயனுள்ள கணக்கு விளையாட்டுகளை அறிமுகம் செய்தேன். அந்த விளையாட்டுகள் மாணவர்களுக்கு ஊக்கமூட்டின. 

- திரு. ஜெரமி டான், கணக்கு ஆசிரியர், தெலோக் குராவ் தொடக்கப்பள்ளி

எல்லா ஆசிரியர்களும் இணையத்தைத் திறமையாகப் பயன்படுத்தும் ஆற்றலைப் பெற்றிருக்கமாட்டார்கள்.

அந்தச் சவாலை வெற்றிகரமாகச் சமாளித்துப் பாடங்களை நடத்திவருகின்றனர் ஒருசில ஆசிரியர்கள்.

கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவி செய்வதில் எனக்கு நாட்டம் உண்டு. ஆனால் வீட்டில் கற்கும் முறையில் அத்தகைய மாணவர்களுக்கு எவ்வாறு உதவி செய்வது என்ற தயக்கம் எனக்கு இருந்தது.

இணையத்தில் நடத்தும் பாடங்களைத் தயாரிப்பது, தொடக்கத்தில் எனக்குக் கடினமாக இருந்தது. சக ஊழியர்களின் உதவியோடு அந்தத் தொழில்நுட்பத்தைக் கற்றுகொண்டேன்.
இப்போது நான் அதை மற்றவர்களுக்குக் கற்றுத்தரும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றுவிட்டேன்.

பின்தங்கிய மாணவர்களுக்கு நான் காணொளிகளைத் தயாரித்து வழங்கினேன். அதில் ஒரு கேள்வியை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான விளக்கங்கள் படிப்படியாக வழங்கப்பட்டிருக்கும்.

- திருமதி சூ சுங் ஹுவாட், கணக்கு ஆசிரியர், ஜிங் ஷான் தொடக்கப்பள்ளி

வீட்டிலிருந்து கற்கும் முறை வகுப்பறைக் கற்றலுக்கு ஈடாகாது என்ற போதிலும் கற்றல் தொடர்வதை அது உறுதிசெய்கிறது.

அதற்குத் தொழில்நுட்பம் பக்கபலமாக இருக்கிறது என, 'செய்தி'இடம் பேசிய ஆசிரியர்கள் தெரிவித்தனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்