Images
  • saf home recovery
    (படம்: Facebook/Ng Eng Hen)

வீட்டில் குணமடையும் திட்டத்தைச் சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கும் சிங்கப்பூர் ஆயுதப் படையினர்

வீட்டில் குணமடையும் திட்டத்தை நிர்வகிக்கும் பொறுப்பைச் சுகாதார அமைச்சிடம் சிங்கப்பூர் ஆயுதப் படையினர் ஒப்படைத்துள்ளனர்.

அதுகுறித்துத் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் (Ng Eng Hen) தகவல் வெளியிட்டார்.

செப்டம்பரில் சிங்கப்பூரில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகளவில் பதிவாயின.

அப்போது வீட்டில் குணமடையும் திட்டத்துக்கு ஆதரவளிக்கச் சிங்கப்பூர் ஆயுதப் படையைச் சேர்ந்த சுமார் 450 அதிகாரிகள் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர்.

அவர்கள் நேரடித் தொலைபேசி எண்ணுக்கு அழைக்கும் நோயாளிகளுக்குத் தகவல் வழங்குவது, வீட்டில் குணமடையும் நடைமுறைகளில் உதவி புரிவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

தற்போது வீட்டில் குணமடையும் திட்டம் நிலைத்தன்மை பெற்றுள்ள நிலையில், பொறுப்புகள் சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்படும் என்று அமைச்சர் இங் கூறினார்.

திட்டத்தில் பங்காற்றிய அனைத்து சேவையாளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

சேவையாளர்கள் சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்புச் செயல்முறையில் நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்க்க உதவியதாகவும் அமைச்சர் இங் கூறினார்.

-CNA/az(gr)

Top