Images
  • honestbee
    படம்: Honestbee

உணவு விநியோகச் சேவையை ரத்துசெய்யும் Honestbee நிறுவனம்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சிங்கப்பூரில் Honestbee நிறுவனம்,  அதன் உணவு விநியோகச் சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

அதன் வர்த்தகத்தில் மேற்கொள்ளப்படும் மறுஆய்வின் ஒரு பகுதியாக அந்தச் சேவை ரத்துசெய்யப்படும் என Honestbee கூறியது.

அது வழங்கிவரும் சலவைச் சேவையும் அடுத்த திங்கட்கிழமை முதல் ரத்துசெய்யப்படும் என்றும் அது தெரிவித்தது.

நிறுவனத்தில் பகுதிநேரமாகப் பணியாற்றும் விநியோகப் பிரிவு ஊழியர்களில் சுமார் 400 பேரை அந்த மாற்றங்கள் பாதிக்கும்.

வீட்டுக்குத் தேவையான பொருள்களை விநியோகம் செய்யும் சேவையும், அதன் habitat பேரங்காடியும் தொடர்ந்து வழக்கம்போல் செயல்படும் என்று Honestbee தெரிவித்தது.


Top