Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஹாங்காங்கில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள் - கவச வாகனகளைத் தயார்படுத்தும் சீனா

ஹாங்காங் நகர எல்லைக்கு அருகிலுள்ள சீனத் தலைநில நகரில், கவச வாகனங்கள் ஒன்றுகூடிவருவதைச் சீன அரசாங்க ஊடகங்கள் ஒளிபரப்பியுள்ளன.

வாசிப்புநேரம் -
ஹாங்காங்கில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள் - கவச வாகனகளைத் தயார்படுத்தும் சீனா

(படம்: Screenshot)

ஹாங்காங் நகர எல்லைக்கு அருகிலுள்ள சீனத் தலைநில நகரில், கவச வாகனங்கள் ஒன்றுகூடிவருவதைச் சீன அரசாங்க ஊடகங்கள் ஒளிபரப்பியுள்ளன.

அவை வெளியிட்ட படத்தில், ஷென்ஸென் (Shenzhen) நகரில், அதிக எண்ணிக்கையிலான கவச வாகனங்கள் நகர்ந்து செல்வதும், சில வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதும் காட்டப்பட்டன.

ஹாங்காங்கில், பத்து வாரங்களாகத் தொடரும் ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துவரும் நிலையில், இந்தக் காணொளி வெளியாகியிருக்கிறது.

ராணுவப் பயிற்சிக்காக, கவச வாகன அணிவகுப்பு ஷென்ஸென் நகரை நோக்கிச் செல்வதாக, People's Daily நாளேடு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட காணொளி குறிப்பிட்டது.

ஹாங்காங்கில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள், பெய்ச்சிங்கிற்குச் சினமூட்டியுள்ளன. ஆர்ப்பாட்டத்தின்போது நடந்த வன்செயல்கள் சிலவற்றைப் பெய்ச்சிங், "பயங்கரவாதம்" என்று கூறிச் சாடியது.

இம்மாதம் 6ஆம் தேதியன்று, சீனக் காவல்துறையினர் 12-ஆயிரம் பேர் ஷென்ஸென் நகரில் கலகத் தடுப்புப் பயிற்சியில் பங்கேற்றனர்.

சமூக நிலைத்தன்மையைப் பராமரிக்கவும் காவல்துறையினரிடையே நம்பிக்கையை வலுப்படுத்தவும் அந்தப் பயிற்சி நடத்தப்பட்டதாக ஷென்ஸென் நகரக் காவல்துறை குறிப்பிட்டிருந்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்