Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புதிய செயற்கை உடற்பாகத்துடன் நன்கு தேறிவரும் பறவை

ஜூரோங் பறவை பூங்காவில் உள்ள ஹோர்ன்பில் (Hornbill) பறவை, அறுவை சிகிச்சைக்குப் பிறகு நன்கு தேறிவருவதாக சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
புதிய செயற்கை உடற்பாகத்துடன் நன்கு தேறிவரும் பறவை

(படம்: Wildlife Reserves Singapore)

வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்

ஜூரோங் பறவை பூங்காவில் உள்ள ஹோர்ன்பில் (Hornbill) பறவை, அறுவை சிகிச்சைக்குப் பிறகு நன்கு தேறிவருவதாக சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகம் தெரிவித்துள்ளது.

நான்கு மாதங்களுக்கு முன்னர், யாரி (Jary) என்ற அந்த ஹொர்ன்பிலுக்கு (இருவாட்சி பறவை) அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

பறவையின் அலகில் புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டதால் அறுவை சிகிச்சையில் அதற்கு முப்பரிமாண செயற்கை உடற்பாகம் பொருத்தப்பட்டது.

சிகிச்சைக்குப் பிறகு கடந்த மாதம் 30ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட மருத்துவச் சோதனையில், யாரி நன்கு குணமடைந்து வருவதாகத் தெரிந்தது.

(படம்: Wildlife Reserves Singapore)

வரும் ஜூன் மாதத்தில் அந்தப் பறவைக்கு மீண்டும் அடுத்த மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும். யாரி முழுமையாகக் குணமடைந்துவிடும் என்று எதிர்பார்க்கும் நிபுணர்கள், அதைச் சிறப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்