Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களைச் சென்றுபார்க்க நிபந்தனைகளுடன் அனுமதி

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள அன்புக்குரியவர்களை ஒரே வீட்டில் வசிக்கும் குடுமபத்தினர் அல்லது வேறொரு வீட்டில் வசிக்கும் குடும்பத்தினர் சென்று பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களைச் சென்றுபார்க்க நிபந்தனைகளுடன் அனுமதி

(படம்: SGH)

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள அன்புக்குரியவர்களை ஒரே வீட்டில் வசிக்கும் குடுமபத்தினர் அல்லது வேறொரு வீட்டில் வசிக்கும் குடும்பத்தினர் சென்று பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் உள்ளவர்களைச் சென்று பார்க்க அதிகபட்சமாக ஐவருக்கு அனுமதி வழங்கப்படும். நோயாளிகளை ஒவ்வொருவராகச் சென்று பார்க்கலாம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நோயாளிகளைச் சென்று பார்ப்பதற்குமுன் அந்த ஐவரும் முன்பதிவு செய்திருககவேண்டும்.

கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்கவும், நோயாளிகளைச் சந்திப்பவர்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்பில் நேரடித் தொடர்பில் இல்லாமல் இருப்பதற்கும் மருத்துவமனைகள் மேலும் சில விதிமுறைகளை அறிமுகம் செய்யலாம்

கிருமி தொற்றும் அபாயத்தைக் கட்டுப்படுத்த தேவைக்கேற்ப மேலும் சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படலாம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அதிரடித் திட்டக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் இரண்டாம் கட்டத்தில் மருத்துவமனைகளில் உள்ளவர்களைச் சந்திக்கும் விதிமுறைகள் மேலும் தளர்த்தப்படலாம் என்று குறிப்பிடப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்