Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 17,080 பேர் வீட்டிலிருந்தபடி குணமடைந்து வருகிறார்கள்

சிங்கப்பூரில் COVID-19 நோயாளிகள் 1,507 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

வாசிப்புநேரம் -
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 17,080 பேர் வீட்டிலிருந்தபடி குணமடைந்து வருகிறார்கள்

(படம்: NTFGH)

சிங்கப்பூரில் COVID-19 நோயாளிகள் 1,507 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

  • அவர்களில் கடுமையாக நோய்வாய்ப்பட்ட 300 பேருக்கு உயிர்வாயு வழங்கப்படுகிறது.
  • 46 பேர் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
  • நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 17,080 பேர் வீட்டிலிருந்தபடி குணமடைந்து வருகிறார்கள்.
  • 2,885 பேர் சமூகப் பராமரிப்பு வசதிகளில் உள்ளனர்.
  • 473 பேர் சிகிச்சை அளிக்கப்படும் வசதிகளில் உள்ளனர்.

கடந்த 28 நாள்களில்....

  • மருத்துவமனைகளில் உயிர்வாயு சிகிச்சை பெற்றவர்கள் - 1.1 விழுக்காட்டினர்
  • தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டவர்கள் - 0.1 விழுக்காட்டினர்
  • அவர்களில் 49.6 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்
  • 50.4 விழுக்காட்டினர் ஒருமுறை மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அல்லது தடுப்பூசியே போட்டுக்கொள்ளாதவர்கள்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்