Images
  • Hougang Heritage
    படம்: National Heritage Board

ஹவ்காங்கின் வரலாற்றுச் சிறப்பைச் சித்திரிக்கும் புதிய மரபுடைமை நடைபாதை

ஹவ்காங்கில் புதிய மரபுடைமை நடைபாதை திறந்துவிடப்பட்டுள்ளது.

பழங்கால வீடமைப்பிலிருந்து நவீன குடியிருப்புப் பேட்டையாக உருமாற்றம் கண்ட ஹவ்காங்கின் வரலாற்றைச் சித்திரிக்கும் விதமாக அது அமைக்கப்பட்டுள்ளது.

தேசிய மரபுடைமைக் கழகம் சிங்கப்பூரின் வெவ்வேறு பகுதிகளின் வரலாற்றுச் சிறப்பையும், சமூக நினைவலைகளையும் பதிவுசெய்ய மேற்கொண்டுவரும் முயற்சியின் ஓர் அங்கமாக அந்தப் புதிய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

வட்டாரத்தில் பல்வேறு சமயங்களுக்கிடையே நிலவும் நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் விதமாக, தேவாலயம், சீனக்கோயில் என 2 தேசிய நினைவுச் சின்னங்கள் அந்தப் பாதையில் அமைந்துள்ளன.

Top