Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

குறுக்குத் தீவு ரயில் பாதை - ஹவ்காங் ரயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடக்கம் பற்றி அறிவிப்பு

குறுக்குத் தீவு ரயில் பாதை - ஹவ்காங் ரயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடக்கம் பற்றி அறிவிப்பு

வாசிப்புநேரம் -

குறுக்குத் தீவு ரயில் பாதையின் ஹவ்காங் ரயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகள், இவ்வாண்டின் நான்காம் காலாண்டில் தொடங்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

பேருந்து மாற்றும் நிலையம், சுரங்கப்பாதை, ஏற்கனவே உள்ள ஹவ்காங் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் கூடுதலான மாற்றுப் பணிகள் ஆகியவை அந்த கட்டுமானப் பணிகளில் அடங்கும்.

திட்டத்தின் வடிவமைப்புக்கும் கட்டுமானத்துக்கும் 604 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள குத்தகை, Samsung C&T நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது Samsung C&T நிறுவனம், வடக்கு-தெற்கு ரயில் சேவையின் MRT நிலையங்கள், சுரங்கப்பாதைகள் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

குறுக்குத் தீவு ரயில் பாதை மூன்று கட்டங்களாகக் கட்டப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக ஹவ்காங் ரயில் நிலையம் உட்பட 12 நிலையங்கள் அமைக்கப்படும்.

அதன் ரயில் சேவை 2030-இல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறுக்குத் தீவு ரயில் பாதையின் மூலம் 100ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பலனடையவுள்ளன.

லோயாங், தெம்பனிஸ், பாசிர் ரிஸ், டெஃபு, ஹவ்காங், சிராங்கூன் நார்த், அங் மோ கியோ ஆகிய குடியிருப்பு, தொழிற்சாலைப் பகுதிகளுக்கு ரயில் சேவைகள் வழங்கப்படும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்