Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இளம் சிங்கப்பூரர்கள், சொந்த வீடுகளை வாங்க உதவியளிப்பது மிகவும் அவசியம் - துணைப் பிரதமர் ஹெங்

சிங்கப்பூர் சொத்துச் சந்தை, தொடர்ந்து நிலையாக இருப்பதை உறுதிசெய்ய,  அரசாங்கம் அதை அணுக்கமாய் கவனித்துவரும் எனத்  துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் சொத்துச் சந்தை, தொடர்ந்து நிலையாக இருப்பதை உறுதிசெய்ய, அரசாங்கம் அதை அணுக்கமாய் கவனித்துவரும் எனத் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் தெரிவித்துள்ளார்.

நோய்ப்பரவல் காலத்திலும், உலக அளவில் சொத்து விலை அதிகரித்துவரும் நிலையில், அந்த உத்தரவாதத்தை அவர் வழங்கினார்.

சிங்கப்பூர் சொத்துச் சந்தை மேம்பாட்டாளர்கள் சங்கத்தின் நிகழ்ச்சியில், இணையம்வழி பங்கேற்று அவர் பேசினார்.

நம்பிக்கையூட்டும் நிலவரத்திற்கு இடையே, உள்ளூர் சொத்துச் சந்தை ஏறுமுகமாக உள்ளதைத் துணைப் பிரதமர் ஹெங் சுட்டினார்.

நிச்சயமற்ற பொருளியல் சூழலில், விழிப்புடன் இருக்கவேண்டும் என்றார் அவர்.

பொருளாதார அடிப்படைகளை மீறி, சொத்துச் சந்தை செயல்படுவதைத் தவிர்ப்பதற்கு அது உதவும் எனத் திரு. ஹெங் கூறினார்.

இளம் சிங்கப்பூரர்கள், சொந்த வீடுகளை வாங்க உதவியளிப்பது மிகவும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

சிங்கப்பூரின் மூப்படையும் சமூகத்துக்கு ஏற்றவாறு, பராமரிப்புச் சேவைகளோடு இணைந்த புதுவிதக் குடியிருப்புத் தெரிவுகள் தற்போது உள்ளதையும் திரு. ஹெங் சுட்டினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்