Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'துவண்டுபோவதில் அர்த்தமில்லை; புதிய வழிகளை ஆராய்ந்து, புதிய திறன்களைக் கற்று, வியாபாரத்தைத் தொடர்கிறோம்': அக்கம்பக்க இந்திய உணவங்காடிகள்

நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் நடப்பில் உள்ளதால் வாடிக்கையாளர்கள் தற்போது உணவங்காடிக் கடைகளுக்குச் செல்வதை விட வீட்டிலிருந்து உணவைப் பெற விரும்புகின்றனர். இந்திய உணவங்காடிக் கடைகள் இந்தச் சூழலில் தங்கள் சேவைகளை எந்தவகையில்  மாற்றியமைத்துள்ளன என்பதை 'செய்தி' அறிந்துவந்தது.

வாசிப்புநேரம் -

நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் நடப்பில் உள்ளதால் வாடிக்கையாளர்கள் தற்போது உணவங்காடிக் கடைகளுக்குச் செல்வதை விட வீட்டிலிருந்து உணவைப் பெற விரும்புகின்றனர். இந்திய உணவங்காடிக் கடைகள் இந்தச் சூழலில் தங்கள் சேவைகளை எந்தவகையில்  மாற்றியமைத்துள்ளன என்பதை 'செய்தி' அறிந்துவந்தது.

Foodpanda, Grab, Deliveroo போன்ற விநியோகச் சேவைச் செயலிகளின்மூலம் வாடிக்கையாளர்கள் உணவை வழக்கம் போல வாங்கிக் கொள்ளலாம். ஆனால் குறிப்பிட்ட தூரத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அவ்வாறு பொருள்களை விநியோகம் செய்ய முடியும்.

தளவாடச் சேவைகளை வழங்கும் Lalamove என்னும் செயலியிலும் புதிதாக எங்களின் சேவைகளை அறிமுகம் செய்துள்ளோம். சிங்கப்பூரின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் அதன் மூலம் உணவை விநியோகம் செய்ய முடியும். Whatsapp மூலம் வாடிக்கையாளர் எனக்குத் தனிப்பட்ட முறையில் உணவுப் பட்டியலை அனுப்பினால், Lalamove சேவையின் மூலம் உணவு விநியோகம் செய்யப்படும்.

இடத்தைப் பொறுத்து விநியோகத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படும். இந்திய வாடிக்கையாளர்கள் இதுபோன்ற செயலிகளை அதிகம் பயன்படுத்த முன்வர வேண்டும்.


- முஜீபுர் ரஹ்மான்

ஒருசில கடைகள் வியாபாரம் முன்பு இருந்ததைவிட அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தன. வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக ஒரே நேரத்தில் இருப்பதால் அதற்கு ஏற்றவாறு சேவையில் சில மாற்றங்களைச் செய்துள்ளார் திரு. ஹபீப்.

அதன் விலை 50 வெள்ளி.

இலவசமாக Family pack platter விநியோகிக்கப்படுகின்றது.

சமூக ஊடகங்களின் உதவியையும் ஒருசில கடைகள் நாடியுள்ளன.

- அப்துல் வாஹிட்

ஊழியர்களுக்குப் புதிய திறன்களைக் கற்றுக் கொடுப்பதிலும் உணவங்காடிக் கடைகள் கவனம் செலுத்தி வருகின்றன.

- ஷான் செல்வம்

இதுதான் சூழல்...இதுதான் நிலைமை.... இவ்வேளையில் துவண்டுபோவதில் அர்த்தமில்லை; புதிய வழிகளை ஆராய்ந்து, புதிய திறன்களைக் கற்றுக்கொண்டு வியாபாரத்தை எப்படித் தொடரலாம் என்பதில் கவனம் செலுத்துவதாக அக்கம்பக்க இந்திய உணவங்காடிக் கடைக்காரர்கள் தெரிவித்தனர்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்