Images
  • sweets
    (படம்: Pexels)

உட்கொள்ளும் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் வழிகள்

ஆனால், இனிப்பு பானங்களைத் தவிர்ப்பது மட்டும் நீரிழிவை எதிர்த்துப் போராடும் ஒரே வழியல்ல.

வேறென்ன வழிகள் உள்ளன? சுகாதார அமைச்சு அளித்துள்ள குறிப்புகளை நீங்களும் பின்பற்றினால் உட்கொள்ளும் சர்க்கரையின் அளவைக் குறைக்கலாம்.

1) பேரங்காடியில் உணவுப் பொருள்களை வாங்கும்போது அமைச்சின் ஆரோக்கிய உணவுக்கான குறியீடு உள்ள உணவுப் பொருள்களை வாங்கலாம். அவற்றில் இனிப்பு குறைவாக இருக்கும்.

2) சர்க்கரையைப் பல விதங்களாக வகைப்படுத்தலாம். Fructose, sucrose, maltose என்று சர்க்கரையைப் பிரிக்கலாம். உணவுகளில் எந்த வகையான சர்க்கரை உள்ளது என்பதைத் தெரிந்துகொண்டால் உட்கொள்ளப்படும் சர்க்கரையின் அளவைக் குறைக்கலாம்.

3) சர்க்கரைக்குப் பதிலாக இனிப்பூட்டியைப் பயன்படுத்தலாம். சில இனிப்பூட்டிகள் இயற்கையான பொருள்களைக் கொண்டுள்ளன. அவற்றை உட்கொள்ளும்போது உணவின் சுவை குறையாது; இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் பாதிப்படையாது.

4) சர்க்கரை அதிகம் உள்ள உண்வுகளைத் தவிர்க்கவேண்டும். கவனமாக இருந்து ஆரோக்கியமான உணவு வகைகளைத் தேர்ந்தெடுப்பது, இனிப்பான, மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளை மிதமான அளவில் உண்பது ஆகியவற்றின் மூலம் சர்க்கரையின் அளவைக் குறைக்கலாம்.

Top