Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சுகாதார மேம்பாட்டு வாரியம் குறைபாடுகளைச் சீர்செய்ய உடனடி நடவடிக்கை

சுகாதார மேம்பாட்டு வாரியம், National Steps Challenge இயக்கத்திலும், வாரியத்தின் சலுகைத் திட்டத்திலும் கண்டுபிடிக்கப்பட்ட குறைபாடுகளைச் சீர்செய்ய உடனடி நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
சுகாதார மேம்பாட்டு வாரியம் குறைபாடுகளைச் சீர்செய்ய உடனடி நடவடிக்கை

(கோப்புப் படம்: Pexels/Ketut Subiyanto)

சுகாதார மேம்பாட்டு வாரியம், National Steps Challenge இயக்கத்திலும், வாரியத்தின் சலுகைத் திட்டத்திலும் கண்டுபிடிக்கப்பட்ட குறைபாடுகளைச் சீர்செய்ய உடனடி நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

செயல்பாடுகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக அது குறிப்பிட்டது.

தலைமைத் தணிக்கையாளர் அலுவலகம் அது குறித்த சில குறைபாடுகளைச் சுட்டியிருந்தது.

நடப்பதை ஊக்குவிக்கும் தேசிய சவால் இயக்கத்தில் சேருவோருக்கு, உடலுறுதிக் கண்காணிப்புக் கருவிகள் வழங்கப்படுகின்றன.

தேவைக்கு அதிகமான அத்தகைய கருவிகளை வாரியம் இருப்பில் வைத்திருப்பதைத், தலைமைத் தணிக்கையாளர் அலுவலகம் சுட்டியது.

சுகாதார மேம்பாட்டு வாரியம் வாங்கிய, சுமார் 5 மில்லியன் வெள்ளி மதிப்பிலான 341,000 உடலுறுதிக் கண்காணிப்புக் கருவிகள் பயன்படுத்தப்படவில்லை என்று அது கூறியது.

அந்த இயக்கத்தின் எதிர்வரும் பருவங்களில், கூடுதல் கவனத்துடன், தேவையை ஊகித்து, அதற்கேற்ப வளங்களைத் தயார்செய்யவிருப்பதாக வாரியம் தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்