Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புகையிலைப் பொருள்களை வயது குறைந்தவர்களுக்கு விற்ற 4 சில்லறைக் கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து

சுகாதார அறிவியல் ஆணையம், புகையிலைப் பொருள்களை, வயது குறைந்தவர்களுக்குச் சட்டவிரோதமாக விற்பனை செய்த 4 சில்லறை விற்பனையாளர்களின் உரிமங்களைத் தற்காலிகமாக ரத்துசெய்துள்ளது.

வாசிப்புநேரம் -
புகையிலைப் பொருள்களை வயது குறைந்தவர்களுக்கு விற்ற 4 சில்லறைக் கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து

(படம்: Health Sciences Authority)

சுகாதார அறிவியல் ஆணையம், புகையிலைப் பொருள்களை, வயது குறைந்தவர்களுக்குச் சட்டவிரோதமாக விற்பனை செய்த 4 சில்லறை விற்பனையாளர்களின் உரிமங்களைத் தற்காலிகமாக ரத்துசெய்துள்ளது.

ஆணையம் மேற்கொண்ட கண்காணிப்பு-அமலாக்க நடவடிக்கையில், 19 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களுக்கு, அந்தக் கடைகள் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தது தெரியவந்தது.

உட்லண்ட்ஸ் அவென்யூ 7, ரிவர்வேல் கிரஸண்ட், கேலாங் பாரு, ஹவ்காங் அவென்யு 8 ஆகிய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

பிடிபட்ட 4 விற்பனையாளர்களும் முதன்முறை அந்தத் தவற்றைச் செய்ததாகக் கூறப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலத்தில் அவர்கள் அந்தத் தவற்றைப் புரிந்தனர்.

அதனையடுத்து, 6 மாத காலத்துக்கு அந்தக் கடைகள் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சில்லறை விற்பனையாளர்கள் புகையிலைப் பொருளை விற்பதற்குரிய வயது வரம்பைக் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று ஆணையம் நினைவுபடுத்தியது.

வெளித் தோற்றத்தை வைத்துமட்டும் வாடிக்கையாளர்களின் வயதைத் தீர்மானிக்க வேண்டாமென அது கேட்டுக்கொண்டது.

சட்டவிரோத விற்பனை குறித்த தகவலறிந்தோர் ஆணையத்திடம் தெரிவிக்கும்படி அது கேட்டுக்கொண்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்