Images
  • Herba saraf
    படம்: சுகாதார அறிவியல் ஆணையம்

Herba Saraf மூலிகை நிவாரணி குறித்து எச்சரிக்கை

மூட்டுவலி, தலைவலி ஆகியவற்றுக்கான நிவாரணி எனக் கூறப்படும் Herba Saraf மூலிகைப் பொருளை வாங்கவோ பயன்படுத்தவோ வேண்டாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது(மார்ச் 13) சுகாதார அறிவியல் ஆணையம்.

மூட்டுவலி காரணமாக அதனை ஒரு மாதத்திற்கு மேல் பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர் ஒருவர் உடலில் சர்க்கரையை ஏற்றுக்கொள்ளும் சக்தியை இழந்ததாக ஆணையம் தெரிவித்தது.

அவ்வாறு இழக்கும்போது ஒருவருக்கு நீரிழிவு நோயும் இருதய நோயும் ஏற்படக்கூடிய அபாயம் அதிகரிக்கிறது.

ஆணையம் அந்தப் பொருளைச் சோதனை செய்தபோது அதில் dexamethasone ஊக்க மருந்து இருந்தது கண்டறியப்பட்டது.

மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே அதனை உட்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.


உங்கள் கருத்து

Top