Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் 2 மில்லியன் வெள்ளிக்கும் மேல் பெறுமானமுள்ள மின்-சிகரெட்டுகள் பறிமுதல்

சிங்கப்பூரில் சென்ற வாரம், 2 மில்லியன் மின்-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் 2 மில்லியன் வெள்ளிக்கும் மேல் பெறுமானமுள்ள மின்-சிகரெட்டுகள் பறிமுதல்

(படம்: Health Sciences Authority)

சிங்கப்பூரில் சென்ற வாரம், 2 மில்லியன் மின்-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட ஆக அதிக அளவிலான மின் சிகரெட்டுகள் அவை என்று சுகாதார அறிவியல் ஆணையம் கூறியது.

அதன் மூலம் சட்டவிரோத விநியோகத் தொடர் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்பில் மூவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

பூன் லேயில் (Boon Lay) உள்ள ஒரு சரக்குக் கூடத்தில் அதிகாரிகள் சோதனையிட்ட போது மின் சிகரெட்டுகளும் வேறு சில சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

10,000க்கும் மேற்பட்ட வகை மின்னியல் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

புகையிலைப் பொருள் சட்டத்தின் கீழ், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவருக்கு 10,000 வெள்ளி வரை அபராதமோ அதிகபட்சம் 6 மாதச் சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம் என்பதைச் சுகாதார அறிவியல் ஆணையம் நினைவூட்டியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்