Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19 அனுபவத்தைக் கொண்டு புதிய நோய்ப்பரவலைச் சமாளிக்கத் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யத் தயாராக வேண்டும்: துணைப் பிரதமர் ஹெங்

COVID-19 அனுபவத்தைக் கொண்டு புதிய நோய்ப்பரவலைச் சமாளிக்கத் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யத் தயாராக வேண்டும்: துணைப் பிரதமர் ஹெங் 

வாசிப்புநேரம் -

COVID-19 இலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, புதிய நோய்ப்பரவலைச் சமாளிக்கத் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்து தயாராக வேண்டும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் தெரிவித்துள்ளார்.

அறிவியலும், தொழில்நுட்பமும் இனி வரக்கூடிய புதிய நோய்ப்பரவலைச் சமாளிக்க நாடுகளுக்கு உதவும் என்றார் அவர்.

கொரோனா கிருமிப்பரவலை முறியடிப்பதில் அவ்விரண்டும் முக்கியப் பங்காற்றியதை அவர் சுட்டினார்.

வருங்காலத்தின் புதிய நோய்களை முறியடிக்க, உலகின் ஆற்றலை வலுப்படுத்தத் தேவையான மூன்று அம்சங்களில் அறிவியலும் தொழில்நுட்பமும் முக்கியமானவை என்றார் திரு. ஹெங்.

"வருங்கால நோய்ப் பரவலைக் கையாள, COVID-19 கற்றுத் தந்த பாடங்கள்" என்ற தலைப்பில் நடத்தப்பட்ட Temasek Shophouse Conversation கருத்தரங்கில் அவர் பேசினார்.

கிருமித்தொற்றுப் பரிசோதனைக் கருவிகள், சிகிச்சை, ஆகியவற்றின் அதிவேக மேம்பாடுகள், தொடர்புத் தடங்களைக் கண்டறிய உதவும் புதிய மின்னிலக்கத் தீர்வுகள், விரைவான ஒப்புதலைப் பெற்றுள்ள தடுப்பூசிகள் ஆகியவற்றை அவர் சுட்டினார்.

உயிர்மருத்துவ அறிவியல், தொற்றுநோய்களைச் சமாளிக்கும் திறன் போன்றவை, கிருமிப்பரவலைச் சிறப்பாகக் கையாண்டு, உலக முயற்சிகளில் பங்களிக்கவும் சிங்கப்பூருக்கு உதவியதாகத் திரு. ஹெங் கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்