Images
  • Heng swee keat
    (படம்: Mediacorp)

இளம் அமைச்சர்கள், சிங்கப்பூரின் முன்னேற்றத்தில் அக்கறை செலுத்தவேண்டும்: நிதியமைச்சர் ஹெங்

சிங்கப்பூரின் இளைய அமைச்சர்கள், அடுத்த தலைமுறைத் தலைவர்களாவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று நிதியமைச்சர் ஹெங் சுவீ கியட் கூறியுள்ளார்.

இந்தோனேசியாவின் பாலித் தீவில் நடைபெறும் அனைத்துலக பண நிதியம், உலக வங்கி ஆகியவற்றின் வருடாந்தரச் சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் அதனைத் தெரிவித்தார்.

சிங்கப்பூரின் அடுத்த பிரதமர் பொறுப்புக்கு முன்னிலையில் உள்ள அமைச்சர்கள் பற்றிய கேள்விக்கு அமைச்சர் ஹெங் பதிலளித்தார்.

அமைச்சரவையில் உள்ள இளைய அமைச்சர்கள் அனைவரும், ஒருவருக்கொருவர் நல்ல புரிந்துணர்வுடன் கூட்டாகவும், நெருக்கமாகவும் செயல்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார். 

Top