Images
  • HSK no slack
    (படம்: Reuters)

அரசாங்கம் தளர்ந்துவிடவில்லை: நிதியமைச்சர் ஹெங்

சிங்கப்பூர் அரசாங்கம் தளர்ந்துவிடவில்லை என்றும் பிரச்சினைகளைச் சரிசெய்ய அதன் தலைவர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுப்பர் என்றும் நிதியமைச்சர் ஹெங் சுவீ கியெட் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சிங்கப்பூரின் சீன நாளிதழான Lianhe Zaobao-இல் வெளிவந்த தலையங்கத்திற்கு பதிலளித்த திரு ஹெங், அடுத்த பிரதமர் பதவிக்குரியவராக அடையாளங் காணப்பட்டிருக்கிறார்.

தலையங்கம் இம்மாதம் 1ஆம் தேதி வெளிவந்தது.

Singhealth இணைய ஊடுருவல், HIV தகவல் கசிவு, பயிற்சியின்போது ஏற்பட்ட தேசிய சேவையாளர்களின் மரணங்கள் என்று அண்மையில் நடந்த பல சம்பவங்களுக்கு அரசாங்கத்தின் மெத்தனமான போக்கே காரணம் என்று தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தலையங்கம், கடுமையான கேள்விகளை எழுப்பியதாகவும் அவற்றை அமைச்சர்கள் புறக்கணிக்கமாட்டார்கள் என்றும் திரு. ஹெங் கூறினார்.

தோல்விகள் ஏற்படும் ஒவ்வொரு வேளையும், அமைச்சர்கள் தங்களை சுய-பரிசீலனை செய்து நிலைமையைச் சீர்செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வர் என்று அமைச்சர் ஹெங் குறிப்பிட்டார்.

என்றாலும், ஒட்டுமொத்த நிர்வாகமும் தளர்ச்சியடைய அரசியல் தலைமைத்துவம் அனுமதித்துவிட்டது என்று தலையங்கம் குறிப்பிட்ட கருத்தை அவர் நிராகரித்தார்.

அதேபோல், தவறுகள் நேரும்போது மூத்த நிலையில் உள்ளவர்களைப் பொறுப்பாக்க அது தவறிவிட்டது என்பதையும் அவர் மறுத்தார். 

Top