Images
  • heng
    (கோப்புப் படம்: Mediacorp)

பொருளியல் வளர்ச்சி காண்பதற்குத் தொழில்நுட்பம், புத்தாக்கம், தொழில் முனைப்பு மிக முக்கியமானவை: துணைப் பிரதமர் ஹெங்

சிங்கப்பூரின் பொருளியல், நீடித்த நிலையான வளர்ச்சி காண்பதற்குத் தொழில்நுட்பம், புத்தாக்கம், தொழில் முனைப்பு முதலிய அம்சங்கள் மிக முக்கியம் எனத் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் கூறியுள்ளார்.

சூழலுக்கு ஏற்ற வகையில் மாறுவதும் அவசியம் என நிதி அமைச்சருமான திரு. ஹெங் வலியுறுத்தினார்.

இணையம் வழி நடைபெற்ற புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் iLab விழாவில் அவர் கலந்துகொண்டு பேசினார்.

இந்த வட்டாரத்தைச் சேர்ந்த 27 புதிய நிறுவனங்களை இம்முறை அந்த விழா ஈர்த்தது.

புத்தாக்கம் மிகுந்த புதிய பரிந்துரைகளை விழாவின்போது அந்த நிறுவனங்கள் முன்வைக்கவுள்ளன.

COVID-19 நோய்ப்பரவலுக்குப் பிந்திய காலம், சிக்கல் மிகுந்ததாகவும், நிலையற்றதாகவும் இருக்கும் என்பதைத் திரு. ஹெங் சுட்டினார்.

அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் சிங்கப்பூர் துரிதமாகச் செயல்படுவது அவசியம் என்றார் அவர்.

பொருளியல் உருமாற்றத்துக்குப் புத்தாக்கம் இன்றியமையாதது என அவர் வலியுறுத்தினார். புத்தாக்கம், ஆய்வுமேம்பாட்டில் சிங்கப்பூர் தொடர்ந்து முதலீடு செய்யக் கடப்பாடு கொண்டுள்ளதாய்த் துணைப் பிரதமர் சொன்னார். 

Top