Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Carousell, Shopback போன்ற நிறுவனங்களை உருவாக்க உதவிய Startup Weekend நிகழ்ச்சி

புத்தாக்கம், வர்த்தகத்திற்கு அப்பால், சுற்றுச்சூழல் மேம்பாடு, எளிதில் பாதிக்கப்படுவோருக்கு ஆதரவளிப்பது போன்றவற்றிலும் முக்கியப் பங்கு வகிக்க முடியும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் (Heng Swee Keat) கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
Carousell, Shopback போன்ற நிறுவனங்களை உருவாக்க உதவிய Startup Weekend நிகழ்ச்சி

(படம்: Facebook/Startup Weekend Singapore)

புத்தாக்கம், வர்த்தகத்திற்கு அப்பால், சுற்றுச்சூழல் மேம்பாடு, எளிதில் பாதிக்கப்படுவோருக்கு ஆதரவளிப்பது போன்றவற்றிலும் முக்கியப் பங்கு வகிக்க முடியும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் (Heng Swee Keat) கூறியுள்ளார்.

இணையம் வாயிலாக நடத்தப்பட்ட hackathon போட்டியின் தொடக்கத்தில் அவர் அவ்வாறு சொன்னார்.

அந்தப் போட்டி, Startup Weekend Singapore நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அமைந்தது.

வழக்கமாகப் பயன்படுத்தப்படும் அணுகுமுறைகள் சிறப்பாக இருந்தாலும், புத்தாக்கத்தால் உருவாகும் புதிய அணுகுமுறைகள் நீண்டகாலத்துக்கு உதவும் என்றார் திரு. ஹெங்.

450க்கும் மேற்பட்ட வடிவமைப்பாளர்கள், ஆர்வலர்கள் நிறுவனம் தொடங்குவதற்கான தங்கள் யோசனைகளை முன்வைத்தனர்.

அவர்களுக்கு ஆதரவு வழங்க வழிகாட்டிகள் இருந்தனர்.

அதைத் தொடர்ந்து, நடுவர் குழு ஒன்று அவர்களின் யோசனைகளை மதிப்பிட்டது.

வெற்றி பெற்றவர்களுக்கு 250 ஆயிரம் வெள்ளி வரையிலான பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.

Carousell, Shopback போன்ற நிறுவனங்கள் முந்திய Startup Weekend நிகழ்ச்சிகளின் போது உருவாக்கப்பட்டன.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்