Images
  • hsr (1)
    (படம் : HSR)

அதிவிரைவு ரயில் திட்டம் - மே மாத இறுதி நிலவரப்படி சிங்கப்பூருக்கு 250 மில்லியன் வெள்ளி செலவு: செலவுகள் தொடர்ந்து உயர்கின்றன

அதிவிரைவு ரயில் திட்டத்துக்காக சிங்கப்பூர், மே மாத இறுதியின் நிலவரப்படி, 250 மில்லியன் வெள்ளிக்கு மேல் செலவு செய்திருப்பதாகப் போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான் கூறினார்.

மேலும், அந்தத் திட்டத்தின் தொடர்பில் செலவுகள் அதிகரித்து வரும் நிலையிலும், கடந்த மாதம் 1ம் தேதி சிங்கப்பூர் அனுப்பிய அரசதந்திர ரீதியான கடிதத்துக்கு மலேசியா இதுவரை பதிலளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் அது பற்றி அமைச்சர் காவ் உரையாற்றினார்.

கடந்த இரண்டு மாதங்களாக, மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது உட்பட, அந்நாட்டுத் தலைவர்கள் தெரிவித்த பல்வேறு கருத்துகள், மலேசியா அந்தத் திட்டத்தை இனியும் தொடரத் திட்டம் கொண்டிருக்கவில்லை எனத் தொனிப்பதாகத் திரு காவ் சொன்னார்.

Top