Images
  • HSR (1)
    (படம்: MyHSR)

அதிவேக ரயில் திட்ட அறிக்கை, அடுத்த வாரம் அமைச்சரவையில்:மலேசியா

கோலாலம்பூர் சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் தொடர்பாக சிங்கப்பூர் பிரதிநிதி ஒருவருடன் மலேசிய அமைச்சர் நேற்று சந்திப்பு நடத்தியதாக மலேசியா தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, அது தொடர்பான அறிக்கை அடுத்த வாரம் மலேசிய அமைச்சரவையிடம் ஒப்படைக்கப்படும் என்று மலேசியா சொன்னது.

பொருளியல் விவகாரங்களுக்குப் பொறுப்புவகிக்கும் மலேசிய அமைச்சர் முகமது அஸ்மின் அலி சிங்கப்பூர் பிரதிநிதியுடன் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டது.

செரம்பானில் நேற்று விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மலேசியப் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் அந்த விவரங்களைத் தெரிவித்தார்.

அதிவேக ரயில் திட்டம் தொடர்பான சிக்கல்கள் தொடர்பில் தீர்வுகள் எட்டப்பட்டிருக்கும் என்று திரு லோக் நம்பிக்கை தெரிவித்தார்.

அதன் முடிவுகள் இன்னும் தமக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதிவேக ரயில் திட்டம் தொடர்பில் மலேசியாவுடன் பேச்சு நடத்த இதுவரை நாள் குறிக்கப்படவில்லை என்று சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சு முன்னர் தெரிவித்திருந்தது.

கடந்த மாதம் 23-ஆம் தேதி, மலேசியா ரயில் திட்டம் குறித்த விவரங்களை ஆராய்ந்துவருவதாகவும், அது குறித்த கலந்துரையாடல்கள் விரைவில் தொடங்கும் என்றும் திரு அஸ்மின் கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருந்ததாய் சிங்கப்பூர் சொன்னது.

ரயில் திட்டத்தை ஒத்திவைப்பது குறித்துத் தமது அரசாங்கம் சிங்கப்பூருடன் கலந்துபேசும் என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது முன்னர் தெரிவித்தார்.  

Top