Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர்-கோலாலம்பூர் அதிவேக ரயில் திட்டம் குறித்து கலந்துரையாட இருநாட்டு அமைச்சர்களும் சந்தித்துள்ளனர்

350 கிலோமீட்டர் தொலைவு கட்டப்படவிருந்த அதிவேக ரயில்பாதை சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் இடையிலான பயண நேரத்தை 90 நிமிடத்துக்குக் குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர்-கோலாலம்பூர் அதிவேக ரயில் திட்டம் குறித்து கலந்துரையாட இருநாட்டு அமைச்சர்களும் சந்தித்துள்ளனர்

(படம்: MyHSR)

சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வானும் மலேசியப் பொருளியல் விவகாரத்துறை அமைச்சர் முகம்மது அஸ்மின் அலியும் கடந்த சனிக்கிழமை (11 ஆகஸ்ட்) சந்தித்துப் பேசியதைப் போக்குவரத்து அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் இடையிலான அதிவேக ரயில் திட்டம் குறித்து இருவரும் கலந்துரையாடினர்.

வரும் வாரங்களில் அதனையொட்டிய கலந்துரையாடல்கள் தொடரும் என்று அமைச்சு சேனல்நியூஸ் ஏஷியாவிடம் சொன்னது.

அந்நாட்டு அமைச்சரவையில் இந்த வாரம் அதிவேக ரயில் திட்டம் குறித்த விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று மலேசியா கடந்த சனிக்கிழமை கூறியிருந்தது.

அந்தத் திட்டம் மலேசியாவுக்குப் பலனளிக்காது என்றும் அதனைக் கைவிடவிருப்பதாகவும்  பிரதமர் மகாதீர் முகம்மது கூறியிருந்தார்.

தமது அரசாங்கம் திட்டத்தைத் தள்ளிப்போடுவது குறித்து சிங்கப்பூருடன் கலந்துரையாடும் என்றும் அதன்பிறகு அவர் சொன்னார்.

350 கிலோமீட்டர் தொலைவு கட்டப்படவிருந்த அதிவேக ரயில்பாதை சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் இடையிலான பயண நேரத்தை 90 நிமிடத்துக்குக் குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது சேவை வழங்கும் ரயில்களில்  11 மணிநேரம்வரை பயணம் செய்ய வேண்டும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்