Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பேச்சாளர் சதுக்கத்தில் Hyflux நிறுவனத்தின் மறுசீரமைப்புத் திட்டத்துக்கு எதிர்ப்பு

சிங்கப்பூரில், வரும் சனிக்கிழமை, Hyflux நிறுவனத்தின் மறுசீரமைப்புத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
பேச்சாளர் சதுக்கத்தில் Hyflux நிறுவனத்தின் மறுசீரமைப்புத் திட்டத்துக்கு எதிர்ப்பு

(படம்: Jeremy Long/ CNA)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

சிங்கப்பூரில், வரும் சனிக்கிழமை, Hyflux நிறுவனத்தின் மறுசீரமைப்புத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஹொங் லிம் பூங்காவிலுள்ள பேச்சாளர் சதுக்கத்தில், பிற்பகல் நேரத்தில் அந்தக் கூட்டம் இடம்பெறும்.

முதலீட்டாளர் ஒருவர் அதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இவ்வேளையில், மீட்பு நடவடிக்கையாக, இந்தோனேசியாவின் SM முதலீட்டுக் குழுமத்துடன், Hyflux ஒப்பந்தம் செய்துகொள்ளப் போகிறதா என்பது குறித்து ஆக அண்மைத் தகவல்களைத் தரும்படி, சிங்கப்பூர் பங்கு முதலீட்டாளர் சங்கம் அந்நிறுவனத்தை வலியுறுத்தியுள்ளது.

தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனமான Hyfluxஇன் கடன்சுமைப் பிரச்சினை குறித்த தகவல், இந்த மாதம் 5ஆம் தேதி வெளியானதைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் கவலை அடைந்திருப்பதாக சங்கம் தெரிவித்தது.

அடுத்த மாதம் 5ஆம் தேதிக்குள் கடன் தொகை முறையாகச் செலுத்தப்படாவிட்டால், பொதுப் பயனீட்டுக் கழகம், Hyflux நிறுவனத்துடனான விற்பனை ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Tuaspring கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையும் கழகத்தின் கட்டுபாட்டிற்குள் வரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்