Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Hyflux தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம் தொடர்பில் சிங்கப்பூர்ப் பங்கு முதலீட்டாளர் சங்கம் கேள்விகள் தொடுத்துள்ளது

தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனமான Hyfluxஇன் தலைமை நிர்வாக அதிகாரியுடைய சம்பளம் தொடர்பிலும் நிறுவனத்தின் நிதிச் செயல்பாடுகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -

தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனமான Hyfluxஇன் தலைமை நிர்வாக அதிகாரியுடைய சம்பளம் தொடர்பிலும் நிறுவனத்தின் நிதிச் செயல்பாடுகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

சிங்கப்பூர்ப் பங்கு முதலீட்டாளர் சங்கம் அக்கேள்விகளைத் தொடுத்துள்ளது.

கடந்த ஓர் ஆண்டில் நிறுவனம் 115 மில்லியன் வெள்ளிக்கு மேல் இழப்பைச் சந்தித்துள்ள வேளையில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஒலிவியா லம் (Olivia Lum) 60 மில்லியன் வெள்ளிக்கு மேற்பட்ட லாப ஈவுத் தொகையைப் பெற்றதைப் பற்றி சங்கம் வினவியுள்ளது.

நிறுவனத்தின் தோற்றுவிப்பாளாரான அவர் ஏன் கிடைக்கப்பெற்ற ஆதாயத்தை நிறுவனத்தின் மறுசீரமைப்புக்குப் பயன்படுத்தவில்லை என்று கேட்கப்பட்டது.

மேலும் நிறுவனத்தின் பல அதிகாரிகள் பங்குதாரர்களாகவும் இருப்பதால் அவர்கள் நிறுவனத்தின் மறுசீரமைப்புக்கு
ஏதாவது பங்களித்தனரா என்று பங்கு முதலீட்டாளர் சங்கத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டேவிட் ஜெரால்ட் (David Gerald) நிறுவனத்திற்கு எழுதிய கடிதத்தில் வினவியுள்ளார்.
  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்