Images
  • ICA fake website
    (படம்: ICA)

புதிய போலி இணையத் தளம் குறித்து குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் எச்சரிக்கை

பயனீட்டாளர்களின் கடவுச்சீட்டு, விசா (Visa) போன்றவற்றின் விவரங்களைக் கோரும் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் போலி இணையத் தளம் ஒன்று அறிமுகமாகியுள்ளது.

அந்த இணைய மோசடிபற்றி ஆணையம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

காவல்துறைக்குப் புகார் செய்திருக்கும் ஆணையம் இணையத் தளத்தைத் தடைசெய்ய முயன்று வருகிறது.

இணையத்தைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்குமாறு பொதுமக்களை ஆணையம் வலியுறுத்தியது.

ஆணையத்தின் சேவைகளுக்கு www.ica.gov.sg என்ற அதிகாரத்துவ இணையவாசலை மட்டுமே பொதுமக்கள் நாடவேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டுள்ளது.
 

Top