Images
  • crime (2)
    கோப்புப் படம்: Jeremy Long

மலேசியரிடம் கையூட்டு பெற்றதாகக் குடிநுழைவு அதிகாரிமீது குற்றச்சாட்டு

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சிங்கப்பூர் நிரந்தரவாசத் தகுதிக்கு விண்ணப்பம் செய்த மலேசியரிடமிருந்து கையூட்டு பெற்றதாகக் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரியின்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

49 வயது அதிகாரியான லூசி தியோ(Lucy Teo), ஸெரன் லூ வாய் வூன்(Sharon Loo Wai Woon) என்ற மற்றொரு பெண்ணுடன் இணைந்து சதி நடவடிக்கையில் ஈடுபட்டதாக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

தியோ, மலேசியரான ஃபேனி டே ஹுய் நீயிடமிருந்து(Fenny Tey Hui Nee) 1,500 வெள்ளியைப் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவும் காவல்துறையும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றிருந்தன.

டேயின் விண்ணப்பத்தைத் துரிதப்படுத்த அந்தத் தொகை கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கையூட்டு தொடர்பான குற்றங்களை ஒருவர் புரிந்தது நிரூபிக்கப்பட்டால், 100,000 வெள்ளி வரையிலான அபராதமோ 5 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம். 


Top