Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சீனப் பெண்களிடம் கையூட்டு, பாலியல் சேவைப் பெற்றதாகக் குடிநுழைவுச் சோதனை சாவடிகள் ஆணைய அதிகாரி மீது குற்றச்சாட்டு

சீனப் பெண்களிடம் கையூட்டு, பாலியல் சேவைப் பெற்றதாகக் குடிநுழைவுச் சோதனை சாவடிகள் ஆணைய அதிகாரி மீது குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -
சீனப் பெண்களிடம் கையூட்டு, பாலியல் சேவைப் பெற்றதாகக் குடிநுழைவுச் சோதனை சாவடிகள் ஆணைய அதிகாரி மீது குற்றச்சாட்டு

(கோப்புப் படம்: Jeremy Long)

சீனாவைச் சேர்ந்த இருவரிடம் இருந்து கையூட்டும், பாலியல் சேவைகளையும் பெற்றதற்காகக் குடிநுழைவுச் சோதனை சாவடிகள் ஆணைய அதிகாரி ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சீனாவைச் சேர்ந்த இரண்டு பெண்களுக்கும், சிங்கப்பூரில் தங்குவதற்கான சிறப்பு அனுமதி அட்டைகளைப் பெற்றுக்கொடுப்பதற்குக் கைமாறாக, 47 வயது தியோ வீ பெங் (Teo Hwee Peng) அந்தக் குற்றங்களைப் புரிந்ததாக நம்பப்படுகிறது.

2018-க்கும் கடந்த ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அந்தக் குற்றச்செயல்கள் நடந்ததாகச் சந்தேகிக்கப்படுவதாய், லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு தெரிவித்தது.

ரொக்கப் பணம், கடன், கைபேசி, பாலியல் சேவைகள் போன்றவற்றை தியோ அந்தப் பெண்களிடம் இருந்து பெற்றுக்கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தியோமீது மோசடி தொடர்பான 12 குற்றச்சாட்டுகளும் பதிவாகியிருக்கின்றன.

அந்தக் குற்றச்செயல்களின் தொடர்பில், சீனாவைச் சேர்ந்த அந்த இரண்டு பெண்கள் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்