Images
  • ICA scam
    (படம்: Jeremy Long)

மோசடி அழைப்புகளைப் பற்றி காவல்துறையிடம் புகார் செய்த குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம்

குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்திடமிருந்து தொலைபேசி அழைப்பு வருவதுபோன்ற மோசடி நடப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, ஆணையம், காவல்துறையிடம் புகார் செய்துள்ளது.

தானியங்கி இயந்திர முறையின் வழியாக சில அழைப்புகள் வந்ததாக, ஆணையம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

ஆணையத்திடமிருந்து ஆவணங்களையும் பொட்டலங்களையும் பெற்றுக்கொள்ளுமாறு அழைப்புகளில் குறிப்பிடப்பட்டது.

அத்துடன், விசாரணைகளுக்குத் தனிப்பட்ட தகவல்களை அளிக்குமாறும் அழைப்புகளில் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அதிகாரிகளால் இந்த அழைப்புகள் செய்யப்படவில்லை என்று ஆணையம் உறுதி செய்தது.

ஆணையத்தின் மீதான பொது மக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் இத்தகைய மோசடிகளைக் கடுமையான ஒன்றாய்க் கருதுவதாக அது தெரிவித்தது.

தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவேண்டாம் என்று ஆணையம் பொது மக்களை வலியுறுத்தியது.  

உங்கள் கருத்து

Top