Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நாவூறும் ஐஸ்கிரீம் வகைகளை உருவாக்கும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள்

அவோகாடோ, மிளகு, சீஸ்கேக், பர்கர்....தனித்தனியாக இவற்றையெல்லாம் சாப்பிட்டிருப்பீர்கள். இன்றோ சுமார் 30 மாணவர்கள் அந்த உணவுகளை ஐஸ்கிரீமாக உருவாக்கினர்.

வாசிப்புநேரம் -

அவோகாடோ, மிளகு, சீஸ்கேக், பர்கர்....தனித்தனியாக இவற்றையெல்லாம் சாப்பிட்டிருப்பீர்கள். இன்றோ சுமார் 30 மாணவர்கள் அந்த உணவுகளை ஐஸ்கிரீமாக உருவாக்கினர்.

Instagramஇல் இடம்பெறும் உணவுப் படங்களைப் போல ஐஸ்கிரீமும் பார்ப்பவர்களை நாவூறச் செய்ய வேண்டும் என்பதே அவர்களுக்கான சவால்.

நன்யாங் பலதுறை தொழில்நுட்பக் கல்லூரி, சுவன்சன்ஸ் உணவகம், Food Japan நிறுவனங்களின் ஏற்பாட்டில் ஆண்டுதோறும் நடக்கும் ஐஸ்கிரீம் தயாரிப்புப் போட்டியில் இவ்வாண்டு சிறப்பாக Instagram அம்சம் புகுத்தப்பட்டது. மாணவர்களிடையே புத்தாக்கத்தைத் தூண்டும் நோக்கில் போட்டி அமைகிறது.

ஐஸ்கிரீம் தயாரிப்புப் பற்றிய இரு பயிரலங்குகள், இரு தகுதிச்சுற்றுகளுக்குப் பின் இறுதிச் சுற்றுக்குப் பத்து பள்ளிகள் தகுதிபெற்றன.

லோயாங் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் முதல் பரிசைத் தட்டிச் சென்றனர்.

இரண்டாம் பரிசை NUS High உயர்நிலைப் பள்ளி வென்றது.

(படம்: நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி)

மூன்றாம் இடத்தில் மெத்தடிஸ்ட் பெண்கள் பள்ளி வென்றது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்