Images
  • saf uniform (1)
    கோப்புப் படம்: CNA 

உள்நாட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அழைக்கப்பட்ட சுமார் 580 தேசிய சேவையாளர்கள்

COVID-19 கிருமிப்பரவல் தொடங்கிய பின், உள்நாட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அழைக்கப்பட்ட சுமார் 580 தேசிய சேவையாளர்கள் தங்களது 2 வாரப் பணியை முடித்துள்ளனர்.

அவர்கள் 735ஆவது காவலர் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

உள்நாட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அழைக்கப்பட்ட முதல் பிரிவு அது.

முகாம் பயிற்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வேளையில், தேசிய சேவையாளர்கள் பாதுகாப்புப் பணிக்காக அழைக்கப்பட்டனர்.

கிருமிப்பரவல் சூழலில் சேவைக்கு அழைக்கப்பட்ட போதும் தங்கள் குடும்பங்கள் ஆதரவாய் இருந்ததாக தேசிய சேவையாளர்கள் கூறினர்.

பயிற்சியின்போது, பாதுகாப்பான இடைவெளி கடைப்பிடிக்கப்படுவது உறுதிசெய்யப்பட்டது.

மேலும், முதன்முறையாக, குறிசுடும்
பயிற்சிக்கு இந்தப் பாவனைப் பயிற்சி சாதனம் பயன்படுத்தப்பட்டது.

கண்டதும் சுடுவதா அல்லது அல்லது நிலைமை மோசமடையாமல் தடுக்கும் வகையில் துப்பாக்கிச் சூடு நடத்துவதா என்பதை முடிவுசெய்ய அது உதவுகிறது.

உண்மையான தோட்டாக்களைக் கொண்டு பயிற்சி நடத்தப்பட்டது.

ஜூரோங் தீவு போன்ற இடங்களில் பணியமர்த்தப்பட்ட சுமார் 440 பேர், அத்தகைய பயிற்சிகள் மூலம் பயனடைவர் என்று கூறப்பட்டது. 

Top