Images
  • ikea tampines
    (படம்: Google Maps)

IKEA Tampines, Plaza Singapura உள்ளிட்ட இடங்களுக்குக் கிருமித்தொற்று உறுதியாகும் முன்னர் COVID-19 நோயாளிகள் சென்றிருந்தனர்

சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதியாகும் முன்னர் நோயாளிகள் சென்றுவந்த இடங்களின் பட்டியலைச் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

  • Hougang Mall
  • IKEA Tampines
  • IMM
  • Junction 8
  • NEX கடைத்தொகுதி
  • Plaza Singapura
  • Tiong Bahru Plaza

போன்ற கடைத்தொகுதிகளுக்கு நோய் தொற்றும் காலக்கட்டத்தில் அவர்கள் சென்றிருந்தனர்.

HarbourFront Centre, Lau Pa Sat ஆகியவையும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

அந்த இடங்களைத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சு குறிப்பிட்டது.

நிர்வாகங்கள் துப்புரவு, கிருமிநீக்கப் பணிகளை மேற்கொள்ள தேசிய சுற்றுப்புற அமைச்சு வழிகாட்டும். 

Top