Images
  • dentist (1)
    (படம்:Tan Tock Seng Hospital/Facebook)

போதைப்பொருள் உட்கொண்ட மருத்துவருக்குச் சீர்திருத்தப் பயிற்சி

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மருத்துவர் ஒருவர், பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்; சீர்திருத்தப் பயிற்சிக்குச் செல்லும்படியும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

டாக்டர் டாமியன் இயோ எங் ஹூயி மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் 2017-ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டார்.

அவரிடமிருந்து சில போதைப்பொருள்களும், போதைப்பொருள் உட்கொள்ளப் பயன்படுத்தப்பட்ட சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. டாக்டர் இயோ தமது தகாத செயல்களால், மருத்துவத் துறையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்திவிட்டதாய் ஒழுங்குமுறை விசாரணை மன்றம் தெரிவித்தது.

டான் டொக் செங் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவராகப் பணிபுரிந்துவந்தார் டாக்டர் இயோ.

கடந்த 4 மாதங்களை மறுவாழ்வு நிலையத்தில் கழித்த அவருக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறைந்த பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ள அவர், வேலையிடத்தில் கண்காணிக்கப்படுவார் என்றும் நிபுணர் ஒருவரிடம் சிகிச்சைக்குச் செல்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது.  

Top