Images
  • grab delivery
    (படம்: AFP)

சட்டவிரோத வெளிநாட்டு உணவு விநியோக ஓட்டுநர்கள் - விதிமுறைகளைக் கடுமையாக்கும் நிறுவனங்கள்

சிங்கப்பூர்: வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக உணவு விநியோகச் சேவையில் ஈடுபடுவதைத் தடுக்க GrabFood, Deliveroo, FoodPanda நிறுவனங்கள் அவற்றின் விதிமுறைகளைக் கடுமையாக்கியுள்ளன.

வெளிநாட்டவர்கள் உணவு விநியோகத்தில் ஈடுபடுவது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மனிதவள அமைச்சு சட்டவிரோதமாக உணவு விநியோகம் செய்யும் நபர்களின் மீது சமூக வருகை அனுமதி நடைமுறையின்கீழ் (social visit pass) நடவடிக்கை எடுத்துள்ளது.

அவ்வாறு சட்டவிரோதமாக வேலை செய்யும் நபர்களுக்கு அதிகபட்சமாக ஈராண்டு சிறைத்தண்டனையுடன், 20,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்படும் என்று மனிதவளத்துக்கான துணையமைச்சர் ஸாக்கி முகமது கூறினார்.

2016க்கும் 2018க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சட்டவிரோதமாக வேலை செய்த சுமார் 900 பேர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

CNAஇடம் பேசிய Deliveroo நிறுவனம் அதன் உணவு விநியோக ஓட்டுநர்கள் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகளாக இருப்பதை உறுதிசெய்வதாகக் கூறியது.

GrabFood அதன் ஓட்டுநர்களின் அடையாளத்தைச் சரிபார்த்த பின்னரே அவர்களைச் சேர்த்துக்கொள்வதாகக் கூறியது.

Foodpanda அதன் வேலை அனுமதி வழங்கும் செயல்முறையைக் கடுமையாகக் கண்காணிப்பதாக விளக்கியது.

விதிமுறைகளை மீறி நடந்துகொள்ளும் ஓட்டுநர்களைத் தடைசெய்வதாக நிறுவனங்கள் கூறின.

Top