Images
  • toa payoh
    (படம்: Google Maps Street View)

சட்டவிரோதச் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 8 பேர் மீது விசாரணை

சட்டவிரோதச் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் நோய்ப்பரவல் கட்டுப்பாடுகளை மீறியதாகவும் சந்தேகிக்கப்படும் 8 பேர் மீது விசாரணை நடைபெறுகிறது.

தோ பாயோ லோரோங் 8 (Toa Payoh Lorong), புளோக் 210இல் உள்ள உணவங்காடி நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சூதாட்ட நடவடிக்கை பற்றி தெரியவந்தது.

நேற்று அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் காவல்துறையினர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

28 வயதுக்கும் 69 வயதுக்கும் இடைப்பட்ட 7 ஆண்களையும் பெண்களையும் அவர்கள் கைது செய்தனர்.

மதுபோதையில் தொல்லை கொடுத்ததாகச் சந்தேகிக்கப்படும் 55 வயது ஆடவரும் கைதுசெய்யப்பட்டார்.

பொது இடத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்கு 6 மாதம் வரை சிறைத்தண்டனை, 5,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். 

Top