Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இந்தோனேசியாவில் இருந்து சட்டவிரோதமாக உணவுப் பொருள்களை இறக்குமதி செய்த நிறுவனத்திற்கு அபராதம்

இந்தோனேசியாவில் இருந்து, சட்டவிரோதமாக உணவுப் பொருள்களை இறக்குமதி செய்த நிறுவனத்திற்கு 20,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

இந்தோனேசியாவில் இருந்து, சட்டவிரோதமாக உணவுப் பொருள்களை இறக்குமதி செய்த நிறுவனத்திற்கு 20,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்டது, பதப்படுத்தப்பட்ட உணவு வகை என்று சிங்கப்பூர் உணவு அமைப்பும், குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையமும் தெரிவித்தன.

Reliable Transport & Logistic Services என்ற அந்த நிறுவனத்தின் இயக்குநருக்கும் 15,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

கவனமாக இருந்து, சரியான நடவடிக்கை எடுத்திருந்தால், அவரால் அந்தக் குற்றம் நேராமல் தடுத்திருக்க முடியும் என்பதற்காக அந்த அபராதம் அவருக்கு விதிக்கப்பட்டது.

அக்டோபர் 21ஆம் தேதி சாங்கி விமானப் போக்குவரத்து நடுவத்தில், தகுந்த இறக்குமதி உரிமம் இல்லாமல் மாமிச உணவு வகைகளை அந்நிறுவனம் இறக்குமதி செய்துள்ளது.

அதை கண்டுபிடித்த அதிகாரிகள், விசாரணையில் இறங்கினர்.

சுமார் 735 கிலோகிராம் மாமிசம், 10 கிலோ காய்கறிகள், பழங்கள், பதப்படுத்தப்பட்ட 503 கிலோகிராம் உணவுப்பொருள்களை, நிறுவனம் சட்டவிரோதமாக இறக்குமதி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதிகாரிகள் அவற்றைப் பறிமுதல் செய்தனர்.

சட்டரீதியாக அங்கீகரிக்கப்படாத உணவுப் பொருள்களால், உணவுப் பாதுகாப்புக்கு ஆபத்து நேரும் வாய்ப்பு உள்ளதை அதிகாரிகள் சுட்டினர்.

சிங்கப்பூரின் தரப் பாதுகாப்பு நிலைக்கு உடன்படும் நாடுகளில் இருந்து மட்டுமே, இறைச்சியோ இறைச்சிப் பொருள்களோ இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்பதை அதிகாரிகள் வலியுறுத்தினர்.

- CNA/zl(gr)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்