Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

KTV கிருமித்தொற்றுக் குழுமத்துடன் சம்பந்தப்பட்ட வர்த்தகங்களில் எவற்றுக்கும் மானியம் வழங்கப்படவில்லை

KTV COVID-19 குழுமத்துடன் சம்பந்தப்பட்ட எந்த வர்த்தகத்துக்கும் மானியம் வழங்கப்படவில்லை என்பதை வர்த்தக, தொழில் அமைச்சும் Enterprise Singapore அமைப்பும் தெளிவுபடுத்தியுள்ளன. 

வாசிப்புநேரம் -
KTV கிருமித்தொற்றுக் குழுமத்துடன் சம்பந்தப்பட்ட வர்த்தகங்களில் எவற்றுக்கும் மானியம் வழங்கப்படவில்லை

(கோப்புப்படம்: Facebook/10 Dollar KTV Club)

KTV COVID-19 குழுமத்துடன் சம்பந்தப்பட்ட எந்த வர்த்தகத்துக்கும் மானியம் வழங்கப்படவில்லை என்பதை வர்த்தக, தொழில் அமைச்சும் Enterprise Singapore அமைப்பும் தெளிவுபடுத்தியுள்ளன.

கிருமிப்பரவல் சூழலில் சென்ற ஆண்டு மார்ச் மாத இறுதியிலிருந்தே இரவுக் கேளிக்கை வர்த்தகங்களின் செயல்பாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

அதனால் பாதிக்கப்பட்ட பல வர்த்தகங்கள், பாதுகாப்பு விதிகளுக்குட்பட்டு உணவுக்கடைகள், அலுவலகங்கள் போன்ற மற்ற வர்த்தக இடங்களாக மாற அரசாங்கத்திடம் அனுமதி நாடின.

அவ்வாறு அனுமதி பெற அவை தங்கள் வர்த்தகத் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்தத் தகவல்கள் போன்றவற்றைச் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது.

அனுமதி வழங்கப்பட்ட வர்த்தகங்களுக்கு, மற்ற வர்த்தகங்களாக மாற Enterprise Singapore அமைப்பிடமிருந்து 50,000
வெள்ளி வரையிலான மானியத்தைப் பெறும் வாய்ப்பும் அளிக்கப்பட்டது.

மாற்றங்களைக் கொண்டுவரத் தேவையான செலவுகளை சம்பந்தப்பட்ட வர்த்தகங்கள் செய்த பின், அவற்றுக்கான சோதனைகள் நடத்தப்பட்டன. அனைத்தையும் சரிபார்த்த பின்பே அமைப்பு மனியத்தை வழங்கியது.

இன்றுவரை சுமார் 400 வர்த்தகங்கள் அவ்வாறு மாறியுள்ளன. அவற்றில் 18 வர்த்தகங்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்பட்டது. வேறு வர்த்தகங்களாக மாறிய 10 மதுக்கூடங்கள், 6 இரவுக் கேளிக்கை விடுதிகள், 2 Karaoke பாடல் கூடங்கள் ஆகியவை அவை.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்