Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உரிமமில்லாத வளாகங்களில் இறைச்சியைப் பதப்படுத்தி, சேமித்து வைத்த 2 நிறுவனங்களுக்கு அபராதம்

உரிமமில்லாத வளாகங்களில் இறைச்சியைப் பதப்படுத்தி, சேமித்து வைத்த 2 நிறுவனங்களுக்கு அபராதம்

வாசிப்புநேரம் -
உரிமமில்லாத வளாகங்களில் இறைச்சியைப் பதப்படுத்தி, சேமித்து வைத்த 2 நிறுவனங்களுக்கு அபராதம்

படம்: SFA

சட்டவிரோத இறைச்சிப் பதனீடு, சேமிப்பு தொடர்பில் 2 உள்ளூர் நிறுவனங்களுக்குத் தலா 2,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ILTM Tampines நிறுவனம் முறையான உரிமம் இல்லாமல் இறைச்சிப் பதனீடு செய்ததாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.

கோழி இறைச்சியை நறுமணப் பொருள்களில் ஊறவைப்பது, அறையின் வெப்பநிலைக்குக் கொண்டு வருவது ஆகிய நடவடிக்கைகளில் உரிமமின்றி அது ஈடுபட்டதாகச் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட அங்கிருந்த உணவுப் பொருள்களை அமைப்பின் அனுமதியின்றி, நிறுவனம் அப்புறப்படுத்தியது.

Cent to Dollar நிறுவனம் தனது வளாகத்தில் அனுமதியின்றி உணவுப் பொருள்களைச் சேமித்து வைத்திருந்தது இந்த ஆண்டு மார்ச் மாதம் கண்டறியப்பட்டது.

சட்டவிரோதமாக உணவுப் பொருள்களைப் பதப்படுத்தி், சேமித்து வைப்பவர்ளுக்கு 10,000 வெள்ளி வரை அபராதமோ 12 மாதங்கள் வரை சிறையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்