Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உரிமம் இன்றிக் கட்டணச் சேவைகளை வழங்கிய ஆடவர்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்

உரிமம் இன்றிக் கட்டணச் சேவைகளை வழங்கிய ஆடவர்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்

வாசிப்புநேரம் -
உரிமம் இன்றிக் கட்டணச் சேவைகளை வழங்கிய ஆடவர்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்

(கோப்புப் படம்: Jeremy Long)

உரிமம் இன்றிக் கட்டணச் சேவைகளை வழங்கிய 40-வயது ஆடவர்மீது குற்றஞ்சாட்டப்படவுள்ளது.

இவ்வாண்டு ஏப்ரல் மாதத்திற்கும் மே மாதத்திற்கும் இடையே ஆடவர், வெளிநாடுகளுக்குச் சுமார் 30 பரிவர்த்தனைகளைச் செய்ய உதவினார். கள்ளப் பணத்தை அவர் பெற்றுக்கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது. சுமார் 200,000 வெள்ளி ரொக்கம் அவரின் வங்கிக் கணக்கில் கண்டுபிடிக்கப்பட்டது

நண்பருக்காக வெளிநாட்டுக்குப் பணம் அனுப்பி முகவர் சேவைக் கட்டணம் பெறவிருந்ததாய் ஆடவர் கூறினார்.

சிங்கப்பூரில் கட்டணச் சேவைக்கான உரிமத்தை அவர் பெறவில்லை என்றும், கட்டணச் சேவைச் சட்டத்தின் கீழ் அவருக்கு உரிமம் தேவையில்லை என்று விலக்கு அளிக்கப்படவில்லை என்றும் காவல்துறை தெரிவித்தது.

நாளை (நவம்பர் 26) ஆடவர்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும். சிங்கப்பூரில் உரிமமின்றி கட்டணச் சேவைகள் வழங்குவது சட்டவிரோதமானது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 125,000 வெள்ளி அபராதமோ, மூவாண்டுச் சிறைத்தண்டனையோ, இரண்டுமோ விதிக்கப்படலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்