Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பணிப்பெண்களைக் குறிவைத்து சட்டவிரோதமாகக் கடன் சேவை வழங்கிய ஆடவருக்குச் சிறை, அபராதம்

சிங்கப்பூரில் பணிப்பெண்களைக் குறிவைத்து சட்டவிரோதமாகக் கடன் சேவை வழங்கிய ஆடவருக்கு 2 ஆண்டு, 6 வாரச் சிறைத்தண்டனையுடன் 240,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் பணிப்பெண்களைக் குறிவைத்து சட்டவிரோதமாகக் கடன் சேவை வழங்கிய ஆடவருக்கு 2 ஆண்டு, 6 வாரச் சிறைத்தண்டனையுடன் 240,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அபராதத்தைச் செலுத்தத் தவறினால் ஆடவர் கூடுதலாக 16 வாரம் சிறையில் இருக்க வேண்டும்.

டான் பூன் டெக் என்னும் அந்த 61 வயது ஆடவர், சுமார் 2 ஆண்டுகள் சட்டவிரோதமாகக் கடன் சேவை வழங்கியுள்ளார்.

டானிடம் 19 பணிப்பெண்கள் கடன் வாங்கியுள்ளனர்.

கடன் வாங்கியவர்களை வாரந்தோறும் ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள கடைத்தொகுதிகளில் சந்தித்து பணம் வசூல் செய்வார் டான்.

2019 ஆம் ஆண்டு மே மாதம் அவர் அதிகாரிகளிடம் சிக்கினார்.

அதன் பிறகு அவர் மீது விசாரணை தொடங்கியது.

டானுக்கு உதவியாக அவரது காதலி இருந்துள்ளார்.

காதலி பிலிப்பீன்ஸைச் சேர்ந்த பணிப்பெண் என்பது விசாரணையில் தெரியவந்தது.

சட்டவிரோதமாகக் கடன் சேவை வழங்க ஆடவருக்கு உதவிய அந்தப்
பெண்ணுக்குக் கடந்த ஆண்டு 8 வாரச் சிறைத்தண்டனையுடன் 60,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

அதன் பிறகு பிலிப்பீன்ஸூக்கு அவர் திருப்பி அனுப்பப்பட்டார்.

குறைவான ஊதியம் வாங்கும் பணிப்பெண்களிடம் சிறிய அளவில் கடன் கொடுத்து பல மடங்கு லாபம் ஈட்டியுள்ளார் டான்.

சட்டவிரோதமாகக் கடன் சேவை வழங்கிய ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அவருக்கு 4 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் 300,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்பட்டிருக்கலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்