Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சட்டவிரோத ஆளில்லா வானூர்திகளால் விமானச் சேவைகள் தடைபடுவதைத் தடுக்க நடவடிக்கை

சாங்கி விமான நிலையத்தின் ஆகாயவெளியில் 20 சட்டவிரோத ஆளில்லா வானூர்தி நடவடிக்கைகள் கடந்த 3 மாதங்களில் கண்டுபிடிக்கப்பட்டன.

வாசிப்புநேரம் -

சாங்கி விமான நிலையத்தின் ஆகாயவெளியில் 20 சட்டவிரோத ஆளில்லா வானூர்தி நடவடிக்கைகள் கடந்த 3 மாதங்களில் கண்டுபிடிக்கப்பட்டன.

விமானச் சேவைகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்க, அத்தகைய செயல்களைக் கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்கும் திறன்களை அதிகாரிகள் வலுப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அந்தச் சட்டவிரோத நடவடிக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்தப் கோபுரம் பார்ப்பதற்குச் சாதாரணமாகத் தோன்றலாம்.

ஆனால் இதனுள், அளவையும் பறக்கும் விதத்தையும் பொறுத்து வானூர்திகளைக் கண்டறியும் ரேடார் உள்ளது.

சாங்கி விமான நிலையத்தின், முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கும் அமைப்பு முறையில் உள்ள உணர் கருவிகளில் அந்த ரேடாரும் ஒன்று.

சட்டவிரோத ஆளில்லா வானூர்தி அந்தப் பகுதியில் கண்டறியப்பட்டால், அதிகாரிகள் இந்தச் சாதனத்தைப் பயன்படுத்தலாம்.

அதன் மூலம், வானூர்திகளின் கட்டுப்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தி அவற்றின் செயல்பாட்டை நிறுத்தலாம்.

அதிகாரிகள் இதில் ஓரளவுக்குத் திறனை வளர்த்துக்கொண்டுள்ளதாக மூத்த அமைச்சரும் தேசியப் பாதுகாப்பிற்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான தியோ சீ ஹியென் கூறியுள்ளார்.

ஆனால் வானூர்தித் தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்வதால் அது சிரமமான ஒன்றாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சென்ற ஆண்டின் நடுப்பகுதியில், வானூர்திகள் தென்பட்டதால் விமான நிலையத்தின் செயல்பாடுகள் இருமுறை தடைபட்டன.

அதனைத் தொடர்ந்து பிரச்சினையை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் தீவிரமடைந்தன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்