Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

HDB வீடுகளுக்கு வெளியே கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்துவது சட்டப்படி குற்றம் - ஆனால் அதிமானோர் அதைச் செய்கின்றனர்

வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கு வெளியே அனுமதியின்றிக் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்துவது, சட்டப்படி குற்றமாகக் கருதப்படும். 

வாசிப்புநேரம் -

வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கு வெளியே அனுமதியின்றிக் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்துவது, சட்டப்படி குற்றமாகக் கருதப்படும்.

இருப்பினும், கடந்த ஓராண்டில் அதிகமானோர், தங்கள் வீடுகளுக்கு வெளியே பொருத்துவதற்காகக் கண்காணிப்புக் கேமராக்களை வாங்கிச் செல்வதாகக் கடைக்காரர்கள் கூறுகின்றனர்.

மற்றவர்கள் வசிப்பிடத்தில் அவர்களுக்குத் தேவையற்ற இன்னல்களைத் தருவது, சட்டப்படி குற்றம்.

அதில், அவர்களைக் கண்காணிப்பதும் அடங்கும்.

அந்தக் குற்றத்தைப் புரிவோர் மீது, அவர்களது பக்கத்து வீட்டார் வழக்குத் தொடுக்கலாம்.

Choicecycle CCTV நிறுவனத்தின் உரிமையாளார் திரு. எரிக் சியாங் (Eric Cheong) வீட்டிற்கு வெளியே பொருத்தத்தக்க கண்காணிப்புக் கேமராக்களின் விற்பனை 20 விழுக்காடு அதிகரித்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

'கண்காணிப்புக் கேமராக்களை வீடுகளுக்கு வெளியே பொருத்தும் பெரும்பாலானோர், அவர்களது பொருள்கள் திருட்டுப்போவதாலும், பக்கத்து வீட்டாருடன் நிலவும் பூசல்களாலும் அவ்வாறு செய்கின்றனர்'

என்றார் I-Secure Solutions விற்பனை மேலாளர் திரு. டெரிக் பே (Derek Peh).

அந்த நிறுவனம், ஒவ்வொரு மாதமும் வீடுகளில் பயன்படுத்தப்படும் 100இலிருந்து 200 கண்காணிப்புக் கேமராக்களை விற்பனை செய்வதாகக் குறிப்பிட்டது.

அந்தக் கேமராக்களைப் பொருத்துவதற்கு முன், குடியிருப்பாளர்கள், தங்கள் நகர மன்றத்திடமிருந்து முன்-அனுமதி பெறவேண்டும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்