Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

335 பெண்களைத் தவறான முறையில் படமெடுத்த NTU மாணவர்

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர், சுமார் 5 மாதங்களில் 469 முறை பெண்களைத் தவறான முறையில் படமெடுத்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
335 பெண்களைத் தவறான முறையில் படமெடுத்த NTU மாணவர்

(படம்: Pixabay)

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர், சுமார் 5 மாதங்களில் 469 முறை பெண்களைத் தவறான முறையில் படமெடுத்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

ஷான் ஹோ யான் லிங் என்னும் அந்த 26 வயது ஆடவர் பல்கலைக்கழக மாணவிகள் உட்பட பெண்கள் 335 பேரை ஆபாசமான முறையில் காணொளி எடுத்துள்ளார்.

பெண்களின் மானத்திற்கு இழிவு ஏற்படுத்தும் நடவடிக்கை தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுகள் ஆடவர் மீது சுமத்தப்பட்டன.

மாணவர் அவற்றை ஒப்புக்கொண்டார்.

ஷான் 2018 ஜூலையில் ஈஸ்ட் பாயின்ட் கடைத்தொகுதியில் ஒரு பெண்ணை ஆபாசமாக படமெடுத்தபோது பிடிபட்டார்.

பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் பெண்கள் 335 பேரை அவர் தவறான முறையில் படமெடுத்தது தெரியவந்தது.

மாணவரின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவருக்கு 10 மாதம் 3 வாரத்திற்கும் குறைவான சிறைத்தண்டனை விதிக்குமாறு மாணவர் தரப்பு கேட்டுக்கொண்டது.

மாணவரின் குற்றங்களுக்கு வரும் 23ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

பெண்களின் மானத்திற்கு இழிவு ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஒவ்வொரு குற்றத்திற்கும் ஆடவருக்கு ஓர் ஆண்டு வரை சிறைத் தண்டனையோ அபராதமோ அல்லது இரண்டும் விதிக்க சட்டத்தில் இடமுண்டு.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்