Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மின்னிலக்கத் திறன்களைப் பெறுவதற்குக் கைகொடுக்கும் நிதிக்கு $1.3 மில்லியன் நன்கொடை

சிங்கப்பூரில் மின்னிலக்கத் திறன்களை வளர்த்துக்கொள்ள கைகொடுக்கும் Digital for Life எனும் நிதிக்கு 1.3 மில்லியன் வெள்ளி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் மின்னிலக்கத் திறன்களை வளர்த்துக்கொள்ள கைகொடுக்கும் Digital for Life எனும் நிதிக்கு 1.3 மில்லியன் வெள்ளி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

ஒரு மாதத்துக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட அந்த நிதியில் தற்போது 3.8 மில்லியன் வெள்ளி உள்ளது.

தொழில்நுட்பத்தின் மூலம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் சமூகத் திட்டங்களுக்கு அந்த நிதி பயன்படுத்தப்படும்.

மின்னிலக்கத் திறன்களை மக்களிடையே கொண்டுசேர்ப்பதற்கு உதவிய தொண்டூழியர்களைச் சிறப்பிக்க நடைபெற்ற நிகழ்ச்சியில் நன்கொடை வழங்கப்பட்டது.

நிதியின் மூலம் ஐந்து அமைப்புகள் பயனடைந்துவருகின்றன.

தொழில்நுட்ப ரீதியான திறன்களை மேம்படுத்த உதவும் யோசனைகளைக் கொண்ட லாப நோக்கமற்ற அமைப்புகள் Digital for Life நிதியைப் பயன்படுத்திக்கொள்ளும்படி அரசாங்கம் அறிவுறுத்துகிறது.

அடித்தள நிகழ்ச்சிகளைச் செயல்படுத்துவதே அந்த நிதியின் முக்கிய நோக்கம் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் கூறினார்.

அந்த நிகழ்ச்சிகள் மூலமாக மின்னிலக்கமயமாதல் எல்லா இடங்களிலும் பரவவேண்டும்.

ஒரு சிறந்த மின்னிலக்க எதிர்காலத்தை சிங்கப்பூரில் அனைவருக்கும் உருவாக்கலாம் என்று அமைச்சர் தெரிவித்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்