Images
  • imda

States Times Review அதன் இணையப்பக்கத்திலிருந்து அவதூறான கட்டுரையை அகற்றவேண்டும்: தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் உத்தரவு

States Times Review இணையப்பக்கத்தில் வெளியான கட்டுரை சிங்கப்பூர் அரசாங்கத்தின் நேர்மைமீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் கீழறுப்பது போன்று இருப்பதாகத் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்கள் நலன் கருதி அந்தக் கட்டுரையை இணைய நடைமுறைக் கோட்பாட்டின்கீழ் தடைசெய்வதாக ஆணையம் கூறியது.

States Times Review இன்று மாலை ஐந்து மணிக்குள் அவதூறான கட்டுரையை இணையப்பக்கத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கட்டுரை அகற்றப்படவில்லை என்றால் அந்த இணையப்பக்கம் தடைசெய்யப்படும் என்று ஆணையம் கூறியது.

அந்தக் குறிப்பிட்ட கட்டுரை குறித்த பதிவு Facebookஇலும் பகிரப்பட்டிருப்பதால், அதனையும் தடை செய்யுமாறு ஆணையம் Facebookஇடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Top